Monday, April 22, 2024
Home » உலக தமிழ் ரசிகர்கள் கொண்டாடும் எடிசன் திரைவிருது விழா சென்னையில்

உலக தமிழ் ரசிகர்கள் கொண்டாடும் எடிசன் திரைவிருது விழா சென்னையில்

by Gayan Abeykoon
March 22, 2024 9:55 am 0 comment
எடிசன் விருது குழுத் தலைவர் செல்வகுமார்

லகத் தமிழர்களால் இணையம் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் வாக்குகளைப் பெற்று நடைபெறும் எடிசன் திரைவிருதுகள் விழா சென்னை வர்த்தக மையத்தில் எதிர்வரும் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை வெளியீடு கண்டு, திரைப்படங்கள் தியேட்டர் மற்றும் OTT தளங்களில் வெளியீடு கண்ட திரைத்துறை சார்ந்த நடிகர் நடிகைகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், பின்னணி பாடகர்கள், ஒளிப்பதிவாளர்கள், எடிட்டர்கள், கலை இயக்குனர்கள், சண்டைப் பயிற்சியாளர்கள் நடன இயக்குனர்கள் போன்றவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட உள்ளனர்.  

இந்நிகழ்வில் கடந்த காலங்களில் எடிசன் திரை விருது பெற்றவர்கள் சிறப்பு விருந்தினர்களாகவும், கனடா, அவுஸ்திரேலியா, லண்டன், இலங்கை, சிங்கப்பூர், மலேசிய நாடுகளிலிருந்து திரைக்கலைஞர்களும், ஜான் பிரிட்டோ நடனக் குழுவுடன் இணைந்து கலைநிகழ்வு நடத்த உள்ளனர்.

இந்நிகழ்வில் பார்வையாளர்களாக எடிசன் விருதுக்கு வாக்களித்த ரசிகர்கள் ஆவணத்தைக் காட்டி பார்வையாளர்களாகக் கலந்து கொள்ள உள்ளனர் என எடிசன் விருது குழுத் தலைவர் செல்வகுமார் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT