389
வசதி குறைந்த மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் முகமாக , பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) பஹீம் உல் அஸீஸினால், ரஹ்மத் அறக்கட்டளை மற்றும் இலங்கை செய்தியாளர் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கு உலர் உணவுப் பொதிகள் தகுதியான மக்களுக்கு வழங்குவதற்காக வழங்கி வைக்கப்பட்டன.
புனித ரமழான் மாதத்தில் இந்த அமைப்புகளைச் சார்ந்திருக்கும் வசதி குறைந்த மக்களுக்கு மத்தியில் இந்த உலர் உணவுப் பொதிகள் பகிர்ந்தளிக்கப்படும். பாகிஸ்தான் எப்போதும் இலங்கை மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட தயாராக உள்ளதாக உயர் ஸ்தானிகரலாயம் தெரிவித்துள்ளது.