Thursday, April 25, 2024
Home » இலங்கை PORT CITY இல் படமாக்கப்பட்ட முசாசி திரைப்பட பாடல் வெளியீடு

இலங்கை PORT CITY இல் படமாக்கப்பட்ட முசாசி திரைப்பட பாடல் வெளியீடு

by Prashahini
March 22, 2024 3:46 pm 0 comment

‘நடன புயல்’ பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் ‘முசாசி’ திரைப்படத்திலிருந்து இலங்கையில் PORT CITY இல் படமாக்கப்பட்ட ‘ஸ்டார்லைட் ..’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான காணொளியும் நேற்று (21) வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகி வரும் முசாசி படத்தில் பிரபுதேவா பொலிஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார்.

இவருடன் VTV கணேஷ், ஜான் விஜய், மாஸ்டர் மகேந்திரன், பினு பப்பு, நடிகை லியோனா லிஷாய், அருள்தாஸ், ஜார்ஜ் மரியான், தங்கதுரை, மகேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு லியாண்டர் லீ மார்ட்டி இசையமைக்கிறார். ஜாய் பிலிம் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் ஜான் பிரிட்டோ தயாரிக்கிறார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் இலங்கையில் நடைபெற்றது.

குறித்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பிற்காக பிரபுதேவா உள்ளிட்ட படக்குழுவினர் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர். அந்தவகையில் அப்பாடல் தற்போது இணையத்தில் வெளியாகி இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது.

மேலும் மேலத்தேய இசையின் தாள லயத்துடன் அமைந்திருக்கும் இந்தப் பாடலில் கொன்னக்கோல் இடம்பெற்று இருப்பதும், அதற்கு பிரபுதேவா பரதநாட்டியம் ஆடியிருப்பதும் வித்தியாசமாக இருப்பதால் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

பிரபல நடனக்கலைஞர் பிரபுதேவா இலங்கை வருகை

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT