நோபல் பரிசு வென்ற மரபணு திருத்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட கலங்களில் இருந்து அந்தத் தொற்றை வெற்றிகரமாக நீக்கியதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இது கத்தரிக்கோல் போன்று செயற்படுகின்றபோதும் மூலக்கூறு அளவில் மரபணுவை நீக்குவதால், மோசமான துணுக்குகளை அகற்றுவது அல்லது செயலிழக்கச் செய்ய முடியும். இறுதியில் இது உடலில் இருந்து முழுமையாக வைரஸை அகற்ற முடியுமாக இருக்கும். எனினும் இது பாதுகாப்பானது மற்றும் செயற்திறன் கொண்டது என்பதை உறுதி செய்ய மேலும் சோதனை நடத்தப்பட வேண்டி இருப்பதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போதுள்ள எச்.ஐ.வி. மருந்துகள் தொற்றை தடுக்கின்றபோதும் இல்லாமல் செய்யாது. இந்நிலையில் ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழக ஆய்வுக் குழு தனது கண்டுபிடிப்பு குறித்த விபரத்தை மருத்துவ மாநாடு ஒன்றில் முன்வைத்துள்ளது. இதனை ஒரு கோட்பாட்டு அடிப்படையிலேயே முன்வைத்திருக்கும் அந்தக் குழு விரைவில் எய்ட்ஸ் நோயை குணப்படுத்தும் மருந்தாக மாறாது என்பதை சுட்டிக்காட்டியுள்ளது.