Friday, June 21, 2024
Home » மாதகல் இறங்குதுறை கடற்கரையில் சிரமதானம்

மாதகல் இறங்குதுறை கடற்கரையில் சிரமதானம்

by mahesh
March 20, 2024 11:00 am 0 comment

யாழ். வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட மாதகல் இறங்குதுறை கடற்கரையை சுத்தம் செய்யும் நடவடிக்கை அப்பிரதேச சபையின் ஒழுங்குபடுத்தலின் கீழ் அண்மையில் நடைபெற்றது.

இதன்போது கடற்கரையிலிருந்த பிளாஸ்ரிக் போத்தல்கள், பொலித்தீன் பைகள் உள்ளிட்ட அசுத்தப் பொருட்கள் அகற்றப்பட்டு, மாதகல் இறங்குதுறை கடற்கரை சுத்தம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதேச சபைச் செயலாளர், உத்தியோகத்தர்கள், சண்டிலிப்பாய் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சண்டிலிப்பாய் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் என்.செல்வக்குமாரியின் தலைமையில் கடற்கரை சுத்தம் செய்யும் நடவடிக்கை இடம்பெற்றது.

சாவகச்சேரி விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT