– சரித் இரண்டு இடங்கள் முன்னேற்றம்
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) ஒருநாள் தரவரிசையில் இலங்கை ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க மூன்று இடங்கள் ஏற்றம் கண்டு முதல் 10 இடங்களுக்குள் முன்னேறியுள்ளார்.
அண்மையில் நடந்த பங்களாதேஷுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பெத்தும் நிஸ்ஸங்க மூன்று போட்டிளில் மொத்த 151 ஓட்டங்களை பெற்ற நிலையில் புதிய தரவரிசையில் 8ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
மறுபுறம் சரித் அசலங்க 146 ஓட்டங்களை பெற்று இரண்டு இடங்கள் முன்னேறி 14 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
வணிந்து ஹசரங்க, ICC ரி20 பந்துவீச்சு மற்றும் சகல துறை பிரிவில் தொடர்ச்சியாக 2ஆவது இடத்தை வகிக்கின்றார்.
மஹீஷ் தீக்ஷண ரி20 பந்துவீச்சில் 5ஆவது இடத்தை தொடர்ந்தும் வகிக்கின்றார்.