Home » சிங்கராஜா வனத்தில் 2 யானைகளில் ஒன்றை காணவில்லை

சிங்கராஜா வனத்தில் 2 யானைகளில் ஒன்றை காணவில்லை

by Prashahini
March 20, 2024 2:28 pm 0 comment

சிங்கராஜ வனாந்தரத்தில் காணப்பட்ட இரண்டு யானைகளில் ஒன்றை காணவில்லை என சிங்கராஜ வனாந்தரத்தின் பாதுகாப்பு அதிகாரி சரத் விஜேதுங்க இன்று (20) தெரிவித்தார்.

அத்துடன் இவ்விடயம் குறித்து இரத்தினபுரி மாவட்ட யானைகள் பாதுகாப்பு அமைப்பு நீர்வீழ்ச்சி சுற்றாடல் அமைப்பு ஆகியன தமது அவதானத்தை செலுத்தியுள்ளதாக அறிவித்துள்ளன.

சிங்கராஜா வனாந்தரத்தின் இரத்தினபுரி எல்லையிலிருந்து ஹம்பாந்தோட்டை மற்றும் தென் மாகாண காலி நெலுவ வரையுள்ள பரந்த பிரதேசத்தில் உலாவி வந்த இந்த இரண்டு யானைகளை அடையாளம் காண்பதற்காக ஒரு யானையின் கழுத்தில் கருப்பு நிற கழுத்துப்பட்டி அணிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த இரண்டு யானைகளும் சிங்கராஜ எல்லையை தாண்டி இரத்தினபுரி மாவட்டத்தின் இறக்குவானை மாணிக்கவத்த மற்றும் கலவான பொதுபிட்டிய வன பிரதேசங்களில் உலாவி பல உயிர்களை பலி எடுத்தவைகளாகும்.

எனவே இந்த இரண்டு யானைகள் காணாமல் போதல் குறித்து அவதானத்துடன் விழிப்புடன் இருப்பதாக சிங்கராஜ வனாந்தர பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் குறிப்பிட்ட யானையின் காணாமல் போதல் விடயம் குறித்துக் கடந்த கலவான பிரதேச இணைப்பு குழு கூட்டத்திலும் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இரத்தினபுரி சுழற்சி நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT