1.3K
இலங்கை சகல துறை ஆட்டக்காரர் வணிந்து ஹசரங்க, பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) இதனை அறிவித்துள்ளது. கடந்த வருடம் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர், இத்தொடரில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பும் நிலையில் இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் அணி உடனான 3ஆவது ஒரு நாள் சர்வதேச போட்டியின் போது நடுவரின் முடிவு தொடர்பில் கருத்து வேறுபாடு தெரிவித்தமைக்காக ICC இனால் இத்தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் தனது குற்றத்திற்காக போட்டித் தொகையில் 50% அபராதம் மற்றும் மூன்று மறை புள்ளிகளைப் பெற்றுள்ளார். இதன் காரணமாக கடந்த 24 மாத காலப்பகுதியில் அவரது மொத்த மறை புள்ளிகள் 8 ஆக அதிகரித்துள்ளது.
ICC விதி 7.6 இன் படி, இந்த 8 மறை புள்ளிகளும் போட்டித் தடைக்கான 4 புள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளன. இந்த போட்டித் தடைக்கான 4 புள்ளிகள், 2 டெஸ்ட் போட்டிகளில் அல்லது 4 ODI போட்டிகள் அல்லது 4 T20I போட்டிகளில் இருந்து தடை செய்யப்படுவதற்கு சமமானதாகும்.
அந்த வகையில் இதில் முதலில் எது வருகிறதோ அதில் போட்டித் தடை விதிக்கப்படும். அந்த வகையில் வணிந்து ஹசரங்க பங்களாதேஷுக்கு எதிரான இரண்டு ICC உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டிகளை இழக்க நேரிட்டுள்ளது.
இது இலங்கை அணிக்கு பெரும் இழப்பாகும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.