போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டு புனர்வாழ்வு பெற்ற இளைஞர்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சுயத்தொழில் திட்டங்கள் தொடங்கி வைத்தார்.
அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டு புனர்வாழ்வு பெற்ற இளைஞர்களின் புதிய வாழ்வின் ஆரம்பமாக கோழிப்பண்ணை, மரக்கறிக்கடை, ஒட்டு வேலை, பால் மாடு வளர்ப்பு போன்ற சுயதொழில் திட்டங்களைத் ஆரம்பிக்க ஒவ்வொருவருக்கும் தலா 50,000 ரூபா கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் நேற்று (18) வழங்கி வழங்கி வைக்கப்பட்டது.
அம்பாறையில் உள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்துக்கொண்டனர்.