Saturday, June 22, 2024
Home » நாடு திரும்புகிறார் மதுஷங்க

நாடு திரும்புகிறார் மதுஷங்க

by damith
March 18, 2024 9:11 am 0 comment

பங்களாதேஷுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது உபாதைக்கு உள்ளான இலங்கை வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்க பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் இருந்து விலகி இருப்பதோடு எதிர்வரும் ஐ.பி.எல். தொடரில் முதல் சில போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலையை எதிர்கொண்டுள்ளார்.

மதுஷங்கவின் காயம் தொடர்பில் எடுக்கப்பட்ட எம்.ஆர்.ஐ. சோதனையில் அவருக்கு இடது தொடை எலும்புக் காயம் ஏற்பட்டிருப்பது உறுதியாகி உள்ளாதாகும் அவர் நாடு திரும்பி குணமடைவதற்கான சிகிச்சைகளை பெறவிருப்பதாகவும் இலங்கை கிரிக்கெட் சபை நேற்று (17) வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதுஷங்க மும்பை இந்தியன்ஸ் அணியினால் வாங்கப்பட்டார். இந்திய பிரீமியர் லீக் தொடர் எதிர்வரும் மார்ச் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT