Wednesday, July 17, 2024
Home » பேரனுக்கு தாத்தா அளித்த சிறிய ரக முச்சக்கர வண்டி பரிசு

பேரனுக்கு தாத்தா அளித்த சிறிய ரக முச்சக்கர வண்டி பரிசு

by Prashahini
March 16, 2024 6:36 pm 0 comment

யாழ்ப்பாணம் முத்திரை சந்தி பகுதியை சேர்ந்த ஒருவர் தனது பேரனின் முதலாவது பிறந்தநாளுக்கு , சிறிய ரக முச்சக்கர வண்டியை உருவாக்கி அன்பு பரிசு அளித்துள்ளார்.

பேரனுக்கு ஒரு வயதே ஆகியுள்ளதால் , சிறிய முச்சக்கர வண்டிக்கு மோட்டார் பூட்டி ஓட வைக்க முயற்சிக்கவில்லை எனவும் இரண்டு வயதுக்கு பிறகு சிறிய ரக மோட்டார் ஒன்றினை பொருத்தி , அதனை ரிமோட் மூலம் இயங்க கூடியவாறு செய்வதற்கு முயற்சிகளை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பஜாஜ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் முச்சக்கர வண்டி போன்றே இந்த சிறிய ரக முச்சக்கர வண்டி உருவாக்கப்பட்டுள்ளமையால் பலரும் அதனை உருவாக்கியவரை பாராட்டி வருகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT