– துபாயில் இடம்பெற்ற கூட்டத்தில் ICC அறிவிப்பு
2026 ஆம் ஆண்டு இலங்கை மற்றும் இந்தியா ஆகியன இணைந்து ரி20 உலகக் கிண்ணத்தை நடாத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) அங்கீகாரம் வழங்கியுள்ளது.
துபாயில் நேற்று (15) நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உலகக் கிண்ணத்திற்கான தகுதிச் செயனமுறையும் இதன்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய போட்டியை நடத்தும் இந்தியாவும் இலங்கையும் தானாகவே உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றுள்ளன.
அது தவிர, இவ்வருடம் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் இடம்பெறும் உலகக் கிண்ணத் தொடரில் சிறந்த 8 அணிகள் 2026 போட்டிக்குத் தகுதி பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.