Home » கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கும் வழக்கு நிறைவு வரை பிணை நிராகரிப்பு

கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கும் வழக்கு நிறைவு வரை பிணை நிராகரிப்பு

by Rizwan Segu Mohideen
March 15, 2024 8:06 am 0 comment

தரமற்ற இம்யுனோக்ளோபியுலின் ஊசி மருந்து கொள்வனவு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட ஏழு பேரின் பிணை மனு கோரிக்கையை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் நேற்று (14) நிராகரித்தது.

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அமைச்சின் முன்னாள் செயலாளர் உள்ளிட்டோருக்கு தரமற்ற தடுப்பூசி மருந்து கொள்வனவு வழக்கு நிறைவடையும் வரை பிணை வழங்க முடியாதென்று தெரிவித்துள்ள நீதிமன்றம் அவர்களது கோரிக்கையை நிராகரித்துள்ளது.

மருந்து மோசடி: கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கும் மார்ச் 14 வரை வி.மறியல் நீடிப்பு

மேற்படி வழக்கு நேற்று மாளிகாகந்த மஜிஸ்திரேட் நீதிமன்ற நீதவான் லோச்சனி அபேவிக்கிரம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது முன்னாள் அமைச்சர் கெெஹலிய ரம்புக்வெல்ல, அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த உள்ளிட்ட 07 பேரின் பிணை நிராகரிக்கப்பட்டது.

நேற்றைய தினம் (14) நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்றது. இதன் போது, முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியிருந்தனர். அத்துடன் நேற்று முன்தினம் (13) குற்றத்தடுப்பு விசாரணை திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சுகாதார அமைச்சின் விநியோகப் பிரிவு பிரதிப் பணிப்பாளர் டாக்டர் டி.சுதர்சனவும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டிருந்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT