Sunday, June 16, 2024
Home » தேடுதல் வேட்டையில் சிக்கிய பாரிய போதைப்பொருட்கள்…

தேடுதல் வேட்டையில் சிக்கிய பாரிய போதைப்பொருட்கள்…

by Rizwan Segu Mohideen
March 14, 2024 11:06 am 0 comment

நேற்றையதினம் மோதறை பொலிஸ் நிலையத்தின் விசேட மோட்டார் சைக்கிள் குழுவொன்றினால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில், வீதியால் சென்ற சந்தேகநபர் ஒருவரை சோதனையிட்ட போது, அவரிடமிருந்து 500 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, மேற்கொண்ட விசாரணையில் அவரது வீட்டை சோதனையிட்ட பொலிஸார் ஒன்றரை கி.கி. ஹெரோயின் 7 கி.கி. கஞ்சா, பணம் எண்ணும் இயந்திரம், போதை மாத்திரை தயாரிக்கும் இயந்திரம், இதற்கு பயன்படுத்தப்படும் 950 கிராம் இரசாயனக்கலவை,
ஹெரோயின் அளவிட பயன்படுத்தும் இலத்திரனியல் தராசு ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

வத்தளை, தெலகங்கபாத்த வீதியில் வசிக்கும் 26 வயதான சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மோதர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT