Thursday, July 18, 2024
Home » மன்னார் மனிதப் புதைகுழி வழக்கு மே 13 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

மன்னார் மனிதப் புதைகுழி வழக்கு மே 13 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

- எலும்புகளின் காபன் பரிசோதனையில் இழுபறி

by Prashahini
March 13, 2024 11:02 am 0 comment

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தொடர்பான வழக்கில் சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கை 4 மாதங்களில் சமர்பிக்கப்பட உள்ளதாகவும் திருக்கேதீஸ்வர மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புகளை காபன் பரிசோதனை மேற்கொள்வது தொடர்பாக விவாதிக்க பட்டதாகவும் சட்டத்தரணி வி.எஸ். நிறைஞ்சன் தெரிவித்தார்.

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி வழக்கு விசாரணையானது நேற்று (12) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் CID யினரால் சட்ட வைத்தியர் கேவகேயின் அறிக்கை நான்கு மாதங்களில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாக மன்றின் ஆஜரான சட்டத்தரணி நிறைஞ்சன் தெரிவித்தார்.

திருக்கேதீஸ்வர மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புகள் காபன் பரிசோதனைக்காக அனுப்பப்பட இருந்த நிலையில் அதற்கான நிதி வசதிகள் மேற்கொள்வதற்காக காணாமல் போனோருக்கான அலுவலகத்திடம் அதற்கான விலை மனு கோரப்பட்டு இருந்ததாகவும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் அதற்கான பதிலை அளிக்க முடியாத நிலை காணப்பட்டமையால் அதற்கு பிறிதொரு தவணையை கோரியதாகவும் தெரிவித்தார்.

மன்னார் சதொச மனித புதைகுழி வழக்கில் பேராசிரியர் ராஜ் சோம தேவ், தடயவியல் பொலிஸார் உட்பட அனைத்து தரப்பினரினதும் அறிக்கைகள் பெற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதுடன் சட்ட வைத்திய அதிகாரி ராஜபக்ஸ அடுத்த தவணையில் நேரடியாக நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து நீதிமன்றமானது சட்ட வைத்திய அதிகாரி ராஜபக்சவை நீதிமன்றத்தில் முன்னிலையாகும் அறிவுறுத்தல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதுடன் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் மே 13ஆம் திகதி அழைப்பதற்காக திகதியிடப்பட்டுள்ளது.

மன்னார் குறூப் நிருபர் – எஸ்.றொசேரியன் லெம்பேட்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT