– மாணவர்களுக்கு: செவ்வாய் – வெள்ளி
– பொதுமக்களுக்கு: சனிக்கிழமை
– முன்பதிவுக்கு: 011 2586 499
பராமரிப்பு பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்பட்ட கோள் மண்டலம், மீண்டும் இன்று (13) முதல் திறக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் அபிவிருத்தி மற்றும் புத்தாக்க பணிப்பாளர் கலாநிதி உத்பலா அலஹகோன் இதனைத் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சின் கீழுள்ள கோள் மண்டலத்தின் புரொஜெக்டர் (Projector) உபகரணங்களின் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, கோள் மண்டலம் கடந்த பெப்ரவரி 27ஆம் திகதி முதல் நேற்று (12) வரை தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து குறித்த புரொஜெக்டர்கள் புனரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று (13) புதன்கிழமை முதல் கோள் மண்டலத்தின் காட்சிகள் மீண்டும் ஆரம்பிப்பதற்குத் அவசியமான நடவடிக்கைகளை இலங்கை கோள் மண்டல ஊழியர்கள் முன்னெடுத்துள்ளனர்.
காட்சிகள்
பாடசாலை மாணவர்களுக்கு:
செவ்வாய் – வெள்ளி: மு.ப.10:00 – பி.ப. 2.00 மணி
பொதுமக்களுக்கு
சனிக்கிழமை : மு.ப.10:00 – பி.ப. 2.00 மணி
பாடசாலை மாணவர்களுக்கான முன்பதிவுக்கு: 011 2586 499