Monday, July 22, 2024
Home » ஒஸ்கர் விருது: ஆடைகளின்றி தோன்றிய ஜோன் சீனா

ஒஸ்கர் விருது: ஆடைகளின்றி தோன்றிய ஜோன் சீனா

by Prashahini
March 11, 2024 1:23 am 0 comment

ஒஸ்கர் விருது வழங்கும் விழாவில் பிரபல மல்யுத்த வீரர் ஜோன் சீனா ஆடைகளின்றி தோன்றியது பிரபலங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 96ஆவது ஒஸ்கர் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருதை அறிவிக்க பிரபல WWE வீரர் ஜோன் சீனா வந்தார்.

அப்போது அவர் ஆடைகளின்றி மேடைக்கு வந்து விருதினை அறிவித்தார். அவர் ஆடையின்றி மேடையில் தோன்றியது அங்கிருந்த பிரபலங்களை அதிர்ச்சியிலும், சிரிப்பலையிலும் ஆழ்த்தியது.

இதனைத் தொடர்ந்து ‘புவர் திங்ஸ்’ என்ற படத்திற்கு சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருது வழங்கப்பட்டது. ஜோன் சீனா விருதை அறிவித்த பிறகு, நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்த உடை அவருக்கு அணிவிக்கப்பட்டது.

உடலில் ஆடைகள் இல்லாமல் நடக்க முடியாமல் ஜோன் சீனா நடந்து வந்ததை பார்த்து அங்கிருந்தவர்கள் வயிறு குலுங்க சிரித்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பேசுபொருளாகியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT