கடந்த மார்ச் 02 ஆம் திகதி சுவிட்சர்லாந்தில் வசிக்கும் இலங்கையர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த Gloaming Dinner Dance எனும் மாபெரும் இசை நிகழ்ச்சியானது மாபெரும் வெற்றியடைந்தது.
ஏற்பாட்டாளர்கள் மற்றும் விருந்தினர் கலைஞர்களான ஜே.ஏ. மில்டன் பெரேராவின் மகன் பியூஷன் பெரேரா மற்றும் சித்ரால் சோமபால போன்ற பிரபல சர்வதேச பாடகர்கள் மற்றும் இத்தாலியின் மிலானில் இருந்து வேவ்ஸ் மிலானோ இசைக்குழு இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கலாநிதி பிரனீத் அபேசுந்தர மற்றும் மூத்த இசைக்கலைஞர் நிமல் பெரேரா ஆகியோரும் இந்த கச்சேரியில் அழைக்கப்பட்ட அதிதிகளாக கலந்துகொண்டனர்.
இத்தாலியில் நிபுணத்துவம் வாய்ந்த பேஸ் கிட்டார் வாசிப்பாளரான ஹேமந்த வடுகே தலைமையில் இத்தாலியின் மிலான் நகரில் வசிக்கும் திறமையான 6 இலங்கை இசைக்கலைஞர்களுடன் 2021 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட Waves இசைக்குழு தற்போது இத்தாலி வாழ் இலங்கையர்களின் பல்வேறு நிகழ்வுகளுக்கு அதிக கேள்வியை உருவாக்கியுள்ளது.
ஜய ஸ்ரீ, சாமிக்க சிறிமான்ன., சங்க தினேத், பிவுஷன் பெரேரா (ஜே.ஏ. மில்டன் பெரேராவின் மகன்) மற்றும் சித்ரால் சோமபால ஆகிய பிரபல பாடகர்கள் ஐரோப்பாவில் நடைபெற்ற பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்களித்துள்ளதோடு, இரசிகர்கள் மட்டுமின்றி, அமைப்பாளர்களாலும் இது வெகுவாகப் பாராட்டப்படுகின்றது.
இந்த நாட்களில் தனது சுயாதீன படைப்புகளில் அதிக கவனம் செலுத்தி வரும் Waves இசைக்குழு, இந்த ஆண்டு தனது முதல் பாடலை வெளியிட நம்புவதாக கூறியுள்ளனர். Waves குழுவின் அனைத்து இசைக்கலைஞர்களும் பாடகர்களும் வெளிநாடுகளில் வாழும் ஏனைய இலங்கையர்களைப் போன்று தமது வாழ்க்கை உத்தியாக பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு பல தியாகங்களைச் செய்தும் எந்தவொரு நிகழ்வின் வெற்றிக்கும் தொழில்ரீதியாக பங்களிக்கின்றனர்.
இத்தாலியில் இருந்து தொடங்கிய அவர்களது பயணம் தற்போது இத்தாலியின் அண்டை நாடான சுவிட்சர்லாந்தில் நடைபெறும் Gloaming Dinner Dance கச்சேரி வரை முன்னேறியுள்ளது. மேலும் எதிர்காலத்தில் ஐரோப்பா மற்றும் பிற வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் இசை நிகழ்ச்சிகளுக்கு பங்களிக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளது.