Tuesday, October 15, 2024
Home » SLvBAN: பங்களாதேஷ் ரி20 தொடரை 2-1 கைப்பற்றிய இலங்கை

SLvBAN: பங்களாதேஷ் ரி20 தொடரை 2-1 கைப்பற்றிய இலங்கை

- 3ஆவது போட்டி 28 ஓட்டங்களால் வெற்றி

by Rizwan Segu Mohideen
March 9, 2024 7:02 pm 0 comment

– நுவன் துஷார ஹெட்ரிக் உடன் 5 விக்கெட்டுகள்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ரி20 போட்டியில் இலங்கை அணி 28 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

நாணயச் சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி பெற்று முதலில் இலங்கை அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது.

அந்த வகையில் இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களை பெற்றது.

3rd T20; இலங்கை அணி 174/7

இலங்கை அணி சார்பில் குசல் மெண்டிஸ் 86 (55) ஓட்டங்களை பெற்றுக் கொடுத்ததோடு, தசுன் ஷானக 19* (09) ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொடுத்தார்.

பங்களாதேஷ் அணி சார்பில் தஸ்கின் அஹமட் 2/25 விக்கெட்டுகளையும் ரிஷாட் ஹொஸைன் 2/35 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு 175 ஓட்டங்கள் எனும் இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 19.4 ஒவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 146 ஓட்டங்களை பெற்று தோல்வியைத் தழுவியது.

இலங்கை அணி சார்பில் போட்டியின் 4ஆவது ஓவரில் (3.2, 3.3, 3.4) அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹெட்ரிக் சாதனையை படைத்ததோடு, போட்டியில் மொத்தமாக 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

அந்த வகையில், பங்களாதேஷ் அணியுடனான 3 போட்டிகளைக் கொண்ட ரி20 தொடரில், 1ஆவது மற்றும் 3ஆவது போட்டிகளை வென்ற இலங்கை அணி, 2 – 1 என தொடரை வென்றுள்ளது.

ஆட்ட நாயகன்: நுவன் துஷார
தொடரின் நாயகன்: குசல் மெண்டிஸ்

இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் சர்வதேச போட்டி எதிர்வரும் மார்ச் 13 ஆம் திகதி வியாழக்கிழமை சட்டோகிராமில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அது தவிர இரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் மார்ச் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

Sri Lanka  (20 ovs maximum)
BATTING R B 4s 6s SR
c Soumya Sarkar b Taskin Ahmed 8 12 1 0 66.66
c Soumya Sarkar b Taskin Ahmed 86 55 6 6 156.36
c Shoriful Islam b Rishad Hossain 12 12 2 0 100.00
c Shoriful Islam b Mustafizur Rahman 15 13 1 1 115.38
c Mustafizur Rahman b Shoriful Islam 3 5 0 0 60.00
c Soumya Sarkar b Rishad Hossain 10 7 0 1 142.85
run out (Rishad Hossain/†Litton Das) 19 9 2 1 211.11
not out 7 7 1 0 100.00
Extras (b 5, lb 1, w 8) 14
TOTAL 20 Ov (RR: 8.70) 174/7

Did not bat: 

Fall of wickets: 1-18 (Dhananjaya de Silva, 3.1 ov), 2-52 (Kamindu Mendis, 7.4 ov), 3-111 (Wanindu Hasaranga, 12.5 ov), 4-133 (Charith Asalanka, 14.4 ov), 5-140 (Kusal Mendis, 16.5 ov), 6-152 (Angelo Mathews, 17.5 ov), 7-174 (Dasun Shanaka, 19.6 ov) • DRS
BOWLING O M R W ECON 0s 4s 6s WD NB
4 0 28 1 7.00 9 2 1 1 0
4 0 25 2 6.25 13 3 1 0 0
3 0 22 0 7.33 7 2 1 0 0
4 0 47 1 11.75 8 3 3 2 0
4 0 35 2 8.75 8 1 3 0 0
1 0 11 0 11.00 1 2 0 0 0
Bangladesh  (T: 175 runs from 20 ovs)
BATTING R B 4s 6s SR
c Shanaka b de Silva 7 11 1 0 63.63
b Thushara 11 10 2 0 110.00
b Thushara 1 6 0 0 16.66
b Thushara 0 1 0 0 0.00
lbw b Thushara 0 1 0 0 0.00
lbw b Hasaranga 4 13 0 0 30.76
b Hasaranga 19 20 2 0 95.00
c Samarawickrama b Theekshana 53 30 0 7 176.66
c de Silva b Shanaka 31 21 3 2 147.61
c Shanaka b Thushara 4 2 1 0 200.00
not out 7 3 0 1 233.33
Extras (b 1, lb 1, w 7) 9
TOTAL 19.4 Ov (RR: 7.42) 146
Fall of wickets: 1-13 (Litton Das, 2.2 ov), 2-15 (Najmul Hossain Shanto, 3.2 ov), 3-15 (Towhid Hridoy, 3.3 ov), 4-15 (Mahmudullah, 3.4 ov), 5-24 (Soumya Sarkar, 5.3 ov), 6-32 (Jaker Ali, 8.1 ov), 7-76 (Mahedi Hasan, 13.2 ov), 8-117 (Rishad Hossain, 16.5 ov), 9-134 (Shoriful Islam, 17.6 ov), 10-146 (Taskin Ahmed, 19.4 ov) • DRS
BOWLING O M R W ECON 0s 4s 6s WD NB
1.1 0 5 0 4.28 4 0 0 1 0
4 0 39 0 9.75 9 4 2 1 0
0.5 0 2 1 2.40 4 0 0 1 0
4 1 20 5 5.00 16 0 2 2 0
4 0 32 2 8.00 10 2 2 0 0
4 0 35 1 8.75 12 1 4 0 0
1.4 0 11 1 6.60 7 2 0 1 0

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x