Home » ஒக்ஸ்போர்ட் ஜனாதிபதி கிண்ண இறுதிப் போட்டி நாளை

ஒக்ஸ்போர்ட் ஜனாதிபதி கிண்ண இறுதிப் போட்டி நாளை

by mahesh
March 6, 2024 4:56 pm 0 comment

ஹமீட் அல் ஹூசைனி கல்லூரியின் 80ஆவது குழுவினர் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டியான ஒக்ஸ்போர்ட் ஜனாதிபதி கிண்ணத்தின் மூன்றாம் இடத்துக்கான போட்டி மற்றும் இறுதிப் போட்டி நாளை (07) பிற்பகல் 4:00 மணி முதல் கொழும்பு சுகததாச மைதானத்தில் நடைபெறவுள்ளது

மூன்றாம் இடத்துக்கான போட்டி மாலை 4.00 மணிக்கு கேட்வே கல்லூரி எதிர் அல் ஹிலால் மத்திய கல்லூரிக்கு இடையே நடைபெறவிருப்பதோடு இறுதிப்போட்டி மாலை 6.30 மணிக்கு ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி எதிர் புனித தோமஸ் கல்லூரிக்கு இடையே நடைபெறவுள்ளது.

இறுதிப்போட்டியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாகவும், கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த கௌரவ அதிதியாகவும், 1996 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணத்தை வென்று தந்த அணித் தலைவர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க சிறப்பு அதிதியாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்,

இவ்விறுதிப்போட்டியானது சுகததாச மைதானத்தின் இரவு நேர ஒளி விளக்குகளின் கீழ் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ருஸைக் பாரூக்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT