மேல்மாகாணத்தில் பாடசாலை புத்தகப் பைகளின் எடையைக் குறைக்கும் நோக்கில் வேலைத்திட்டம் ஒன்று உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மாணவர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வில் கனமான பைகளின் தாக்கம் குறித்த அதிகரித்து வரும் கவலைகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் பரிந்துரைகளுடன் இம்முயற்சி இணங்குவதாக மேல் மாகாண கல்விச் செயலாளர் சிறிசோம லொகுவிதான தெரிலித்துள்ளார்.
மாணவர்களின் புத்தகப்பைகளின் எடை அதிகரித்து வருவதால், முதுகுத் தண்டுவடத்தில் பாதிப்பு மற்றும் உடல் உபாதைகள் ஏற்படுவதால், அவசர நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.