486
நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் திருத்தப்பட்டுள்ள நிலையில், SINOPEC நிறுவனமும் இன்று (05) முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை திருத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
அதற்கமைய,
SINOPEC எரிபொருள் விலைகள்
- பெற்றோல் 92: மாற்றமில்லை – ரூ. 368
- பெற்றோல் 95: ரூ. 9 இனால் குறைப்பு – ரூ. 456 இலிருந்து ரூ. 447
- ஒட்டோ டீசல்: மாற்றமில்லை – ரூ. 360
- சுப்பர் டீசல்: ரூ. 10 இனால் குறைப்பு – ரூ. 468 இலிருந்து ரூ. 458
அந்த வகையில் CPC மற்றும் LIOC ஆகியவற்றின் விலைகளிலும் பார்க்க, வழக்கம் போன்று பெற்றோல் ஒக்டேன் 92 மற்றும் ஒட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகளை ரூ. 3 குறைவாக காணப்படுகின்றது.
ஏனைய எரிபொருட்களின் விலைகள் சந்தை விலையில் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
CEYPETCO/ LIOC எரிபொருள் விலைகள்
- பெற்றோல் 92: மாற்றமில்லை – ரூ. 371
- பெற்றோல் 95: ரூ. 9 இனால் குறைப்பு – ரூ. 456 இலிருந்து ரூ. 447
- ஒட்டோ டீசல்: மாற்றமில்லை – ரூ. 363
- சுப்பர் டீசல்: ரூ. 10 இனால் குறைப்பு – ரூ. 468 இலிருந்து ரூ. 458
- மண்ணெண்ணெய்: ரூ. 5 இனால் குறைப்பு – ரூ. 262 இலிருந்து ரூ. 257