570
நாட்டின் பல பகுதிகளில் நாளை (04) வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய நிலைக்கு உயரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடமேல், மேற்கு மற்றும் தெற்கு, சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில இடங்களில் மனித உடலால் உணரக்கூடிய அளவுக்கு வெப்பம் அதிகரித்து காணப்படக்கூடும் என அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
எனவே போதுமான அளவு நீர் அருந்துவது, முடிந்தவரை நிழலாடிய இடங்களில் ஓய்வெடுப்பது, கடுமையான வெளிப்புறச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவது போன்ற சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.