Thursday, April 25, 2024
Home » மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

- முல்லைத்தீவு - அளம்பிலில் சம்பவம்

by Rizwan Segu Mohideen
March 2, 2024 3:17 pm 0 comment

முல்லைத்தீவு – அளம்பில் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

இவ்விபத்தில் இரு மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரும் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு வைத்தியசாலை விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தனர்.

மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த செம்மலையை சேர்ந்த, 54 வயதான நாகராசா யோகராசா என்பவர் இன்று (02) அதிகாலை மரணமடைந்துள்ளார்.

நேற்றிரவு (01) 7.00 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்து சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

குமுழமுனை பகுதியிலிருந்து அளம்பில் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் செம்மலையிலிருந்து தண்ணிமுறிப்பு வயல் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் அளம்பில் சந்திக்கு அருகே சென்று கொண்டிருந்த போது எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளானது.

குமுழமுனை பகுதியிலிருந்து வந்து விபத்தினை ஏற்படுத்தியதாக கூறப்படுபவர்கள் மதுபோதையில் இருந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்தள்ள நிலையில் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஓமந்தை விஷேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT