Sunday, May 26, 2024
Home » பங்களாதேஷ் ரி20: குசல் பெரேராவுக்கு பதில் நிரோஷன் திக்வல்ல அழைக்க வாய்ப்பு

பங்களாதேஷ் ரி20: குசல் பெரேராவுக்கு பதில் நிரோஷன் திக்வல்ல அழைக்க வாய்ப்பு

by Gayan Abeykoon
March 1, 2024 8:48 am 0 comment

பங்களாதேஷுக்கு எதிரான ரி20 தொடருக்கான இலங்கை அணியில் இருந்து துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா விலகி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கை அணி நேற்று (29) பங்களாதேஷை நோக்கி புறப்பட்டுச் சென்றபோதும் குசல் பெரேரா இலங்கை அணியுடன் இணையவில்லை. அவர் சுகவீனமுற்றிருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குசல் பெரேராவுக்கு பதில் துடுப்பாட்ட வரிசையில் மூன்றாவது இடத்தில் கமிந்து மெண்டிஸ் களமிறங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சரித் அசலங்க தனது ஐந்தாவது வரிசையை தக்கவைத்துள்ளார்.

இந்நிலையில் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான குசல் பெரேராவுக்கு பதில் நிரோஷன் திக்வல்ல இலங்கை ரி20 குழாத்திற்கு அழைக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர் தம்புள்ளையில் நேற்று இடம்பெற்ற தேசிய சுப்பர் லீக் போட்டியில் 21 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தடை காரணமாக முதல் இரு ரி20 போட்டிகளிலும் இலங்கை ரி20 அணித் தலைவர் வனிந்து ஹசரங்க ஆடவில்லை என்பதோடு பத்தும் நிசங்கவுக்கு ரி20 போட்டிகளில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை அணி பங்களாதேஷுக்கு எதிராக தலா மூன்று ரி20 மற்றும் ஒருநாள் போட்டிகளிலும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று ரி20 போட்டிகளும் எதிர்வரும் மார்ச் 4, 6 மற்றும் 9 ஆம் திகதிகளில் சில்ஹட்டில் நடைபெறவுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT