Home » அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றிய ஆடற்கலைப் போட்டி

அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றிய ஆடற்கலைப் போட்டி

அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க பிரதம அதிதி

by Gayan Abeykoon
March 1, 2024 8:11 am 0 comment

அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியம், தினகரன், தினகரன்  வாரமஞ்சரி பத்திரிகைகளின் அனுசரணையுடன் அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையே  நடத்தும் ஆடற்கலைப் போட்டி நாளை 2024.03.02ஆம் திகதி சனிக்கிழமை  முற்பகல் 11 மணிக்கு கொழும்பு 07, விஹாரமஹாதேவி பூங்காவுக்கு அருகில் உள்ள  குளிரூட்டப்பட்ட கொழும்பு புதிய நகர சபை மண்டபத்தில் நடத்தவுள்ளது.

புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர  விக்கிரமநாயக்க இவ்விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.  பேராசிரியர் மௌனகுருவும் இவ்விழாவில் கலந்து கொள்ளவுள்ளார். இவ்விழாவில்  கெளரவ அதிதியாக அமைச்சர் ஜீவன் தொண்டமானும் கலந்து கொள்ளவிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

இவ் ஒன்றியம் நாடு முழுவதிலும் உள்ள அறநெறிப் பாடசாலைகளுக்கு  இடையே மாவட்ட ரீதியில் நடத்திய ஆடற்கலைப் போட்டியில் வெற்றி பெற்ற அறநெறிப்  பாடசாலைகள் இந்த இறுதிப் போட்டியில் பங்குபற்றவுள்ளன. நாடு முழுவதிலும்  உள்ள 13 அறநெறிப் பாடசாலைப் பாடசாலைகள் இந்த இறுதிப் போட்டியில்  பங்குபற்றவுள்ளன.   இந்த இறுதிப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெறும் அறநெறிப்  பாடசாலைக்கு ஒரு லட்சம் ரூபா பணப்பரிசும் வெற்றிக் கேடயமும் வழங்கப்படும்.  இரண்டாம் இடத்தைப் பெறும் அறநெறிப் பாடசாலைக்கு ஐம்பது ஆயிரம் ரூபா  பணப்பரிசும் வெற்றிக் கேடயமும் வழங்கப்படும். மூன்றாம் இடத்தைப் பெறும்  அறநெறிப் பாடசாலைக்கு முப்பது ஆயிரம் ரூபா பணப்பரிசும் வெற்றிக் கேடயமும்  வழங்கப்படும். மாவட்ட ரீதியில் நடத்தப்பட்ட போட்டியிலிருந்து இறுதிப்  போட்டி வரை பங்குபற்றிய அனைத்து அறநெறிப் பாடசாலை மாணவ மாணவிகளும் நடனம்  கற்பித்த அறநெறிப் பாடசாலை ஆசிரிய ஆசிரியைகளும் சான்றிதழ்கள் வழங்கி  கௌரவிக்கப்படவுள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x