Friday, June 21, 2024
Home » ஜனாஸா அவசர வாகனச்சேவை அம்பாறை மாவட்ட ஒன்றுகூடல்

ஜனாஸா அவசர வாகனச்சேவை அம்பாறை மாவட்ட ஒன்றுகூடல்

by Gayan Abeykoon
March 1, 2024 8:19 am 0 comment

அகில இலங்கை  ஜனாஸா மற்றும் அவசர வாகன சேவையின் அம்பாறை மாவட்டத்திற்கான  ஒன்று கூடலும், இவ்வேலைத்திட்டத்தை விஸ்தரிக்கும் கூட்டமும் அக்கரைப்பற்று   ‘கிங்க்ஸ் கார்டன்’ கேட்போர் கூடத்தில்  நடைபெற்றது.

அக்கரைப்பற்று தஃவா  பள்ளிவாசல் நம்பிக்கை சபையினரால் ஒழுங்குசெய்யப்பட்ட இந்த ஓன்று கூடலுக்கு அப்பள்ளிவாசல் தலைவர் அல்-ஹாஜ் எம்.எம்.எம்.ரியாத்  தலைமைதாங்கினார்.

மருதமுனை தொடக்கம் பொத்துவில் வரையிலான  பிரதேசங்ககளைச் சேர்ந்த  ஜனாஸா மற்றும் அவசர வாகன சேவை அமைப்புகளின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர்கள் இதில்  பங்கேற்றிருந்தனர்.

“தஃவா”ப்பள்ளிவாசலின் பிரதம கத்தீப் அஷ் ஷெய்க்,  ஜே எம் ஷியாப் (சஹ்வி)  மிகவும் தெளிவான ஆரம்ப உரையை நிகழ்த்தினார். அதனையடுத்து சமுகமளித்த அனைவரினதும் அறிமுக நிகழ்வு நடைபெற்றது..

(அட்டாளைச்சேனை குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT