Home » 2024 பரீட்சைத் திகதிகள் வெளியீடு

2024 பரீட்சைத் திகதிகள் வெளியீடு

- 2024 O/L: பின்னர் அறிவிக்கப்படும்

by Rizwan Segu Mohideen
March 1, 2024 6:50 pm 0 comment

– 2023 O/L: மே 06 – 15
– 2024 தரம் 5 புலமைப்பரிசில்: செப். 15
– 2024 A/L: நவ. 15 – டிச. 20

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாடசாலை பரீட்சைகள் மற்றும் அவற்றின் திகதிகளை, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தரவினால் வெளியிட்டுள்ளார்.

அதற்கமைய, 2023 ஆம் ஆண்டிற்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2024 மே 06 முதல் மே 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

2024 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2024 செப்டெம்பர் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.

2024 ஆம் ஆண்டிற்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை 2024 நவம்பர் 25 முதல் 2024 டிசம்பர் 20ஆம் திகதி வரை நடைபெறும்.

இதேவேளை, 2024 ஆம் ஆண்டிற்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள திகதிகள் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x