Sunday, September 8, 2024
Home » தலவாக்கலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்

தலவாக்கலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்

- 4 நாட்களாக வீடு திரும்பாத நிலையில் முறைப்பாடும் பதிவு

by Prashahini
March 1, 2024 2:12 pm 0 comment

தலவாக்கலை மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து இளைஞன் ஒருவரின் சடலமொன்று இன்று (01) மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

தலவாக்கலை ஹொலிரூட் தோட்டத்தைச் சேர்ந்த 25 வயதான கசுன் லக்மால் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தலவாக்கலை பகுதியில் மரண வீடொன்று சென்று 4 நாட்களாக வீடு திரும்பாத நிலையில் பெற்றோரால் தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த நுவரெலியா நீதவான் பரிசோதனைகளை மேற்கொண்டதன் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தலவாக்கலை குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x