காசா நகரில் உணவு உள்ளிட்ட உதவி பொருட்களை வாங்குவதற்காக திரண்ட மக்கள் மீது இஸ்ரேலிய ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 112 பேர் உயிரிழந்ததாகவும், 750 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் காசா சுகாதாரத்துறை அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும், உயிரிழந்தவர்களின் உடல்கள் கழுதை வண்டியில் கொண்டு செல்லப்பட்டு புதைக்கப்பட்டன.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆனாலும் இந்த சம்பவத்தை இஸ்ரேல் மறுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே காசாவில் காத்திருந்த மக்கள் மீது தாக்குதல் எதுவும் நடத்தவில்லை என்றும் , கூட்ட நெரிசலே உயிரிழப்புக்கு காரணம் என்றும் இஸ்ரேல் இராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.