கல்முனை மாநகர சபையில் Online மூலம் கொடுப்பனவு செலுத்தும் ‘CAT-20 Payment System’ நேற்று செவ்வாய்க்கிழமை (27) அம்மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
கல்முனை மாநகர சபையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற நிதி மோசடியை கவனத்தில் கொண்டு, நிதிப் பிரிவை ஒழுங்குமுறைப்படுத்தி, மோசடியை முற்றாகத் தவிர்த்து, நம்பகமான முறைமையை நடைமுறைப்படுத்தும் வகையில் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சு மற்றும் கிழக்கு மாகாண சபை என்பவற்றின் அங்கீகாரம் பெற்ற வயம்ப அபிவிருத்தி அதிகார சபையின் CAT-20 எனும் செயலி, யூ.என்.டி.பி. நிறுவனத்தின் அனுசரணையுடன் சில மாதங்களுக்கு முன்னர் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் ஓரங்கமாகவே Online மூலம் கொடுப்பனவு செலுத்தும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சாய்ந்தமருது விசேட நிருபர்