Wednesday, September 11, 2024
Home » ெடாக்டர் விக்கினேஸ்வராவின் ஈராண்டு நினைவாக ‘கலாநிதி த.கலாமணி அணிந்துரைகள்’ நூல் வெளியீடு

ெடாக்டர் விக்கினேஸ்வராவின் ஈராண்டு நினைவாக ‘கலாநிதி த.கலாமணி அணிந்துரைகள்’ நூல் வெளியீடு

by mahesh
February 28, 2024 1:16 pm 0 comment

யாழ் சுன்னாகம் புகழ் ​ெடாக்டர் ப. விக்கினேஸ்வரா மக்களுக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஒரு மருத்துவர் ஆவார். இடர்காலத்தில் அவர் நல்கிய மருத்துவப் பணிகளை யாழ்ப்பாணம் மக்கள் என்றும் நினைவில் கொள்வர். சுன்னாகத்தில் நாற்பது ஆண்டுகள் மருத்துவப் பணியாற்றிய வைத்தியர் ப. விக்கினேஸ்வரா அமரராகி (22/02/2022) இரு வருடமாகிறது. ஆனால் அவரிடம் சிகிச்சைபெற்ற மக்கள் இன்றும் அவரது திறமைகளையும், சேவைகளையும் புகழ்ந்து நினைவுகூருகின்றனர்.

‘ஜீவநதி’ பதிப்பகத்தின் 332 ஆவது வெளியீடாக, பிரபல வைத்தியரும் இடர்காலத்தில் மண் பயனுறச் சேவை நல்கிய மக்கள் மருத்துவருமான சுன்னாகம் ​ெடாக்டர் விக்கினேஸ்வரா அவர்களின் ஈராண்டு நினைவாக, ‘கலாநிதி த.கலாமணி அணிந்துரைகள்’ வெளிவருகின்றது.

ஒவ்வொரு வருடமும் ​ெடாக்டர் ப.விக்கினேஸ்வரா நினைவாக ஈழத்து எழுத்தாளர்களின் நூல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

2022 இல் மறைந்த அவரது 31ஆம் நாள் நினைவாக பேராசிரியர் பாலசுகுமார் எழுதிய ‘ஈழத்தில் மாட்டு வண்டிச் சவாரியும் தமிழர் மரபும்’ எனும் நூல் வெளியானது.

இதன் பின்னர் கடந்த வருடம் 2023 இல் ​ெடாக்டர் விக்கினேஸ்வராவின் முதலாவது ஆண்டு நினைவாக இலங்கையின் பிரபல எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய ‘பள்ளிக் கூடங்கள் கட்டடக்கூடுகள் அல்ல’ எனும் கல்வியியல் கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது.

இவ்வருடம் ​ெடாக்டர் விக்கினேஸ்வரா ஈராண்டு நினைவாக கலாநிதி த.கலாமணி அவர்களால் எழுதப்பட்ட 35 படைப்பாளர்களின் நூல்களுக்கான அணிந்துரைகளின் தொகுப்பு நூலான ‘கலாநிதி த.கலாமணி அணிந்துரைகள்’ எனும் நூல் தற்போது வெளிவருகின்றது.

ஐங்கரன் விக்கினேஸ்வரா  அவுஸ்திரேலியா

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x