சிங்கர் ஸ்ரீ லங்கா பிஎல்சி, புத்தாக்கம் மற்றும் நுகர்வோர் இலத்திரனியல் வீட்டு உபயோகப் பொருட்கள் துறையில் முன்னணியில் இருப்பதோடு, சமீபத்தில் HONOR இன் புதிய ஸ்மார்ட்போன் மாதிரிகளை பிரம்மாண்டமாக வெளியிட்டு குறிப்பிடத்தக்கதோர் தடம் பதித்தது.
கொழும்பில் உள்ள ஷங்ரி-லா ஹோட்டலில், HONOR X தொடரின் தொழில்நுட்ப வல்லமை மற்றும் புதுமையான வடிவமைப்பை வெளிப்படுத்தியதோடு, SINGER மற்றும் HONOR X இடையேயான செழிப்பான கூட்டுறவினை சிறப்புடன் வெளிகாட்டுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் HONOR அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, இலங்கை ஸ்மார்ட்போன் உரிமையாளர்கள் மத்தியில் HONOR பெற்ற விரைவான வெற்றியையும் இந்நிகழ்வில் கொண்டாடியது சிறப்பம்சமாகும்.
“ HONOR உடனான எமது கூட்டுறவானது அனைவரும் அணுகக்கூடிய, தொழில்நுட்பத்தில் சிறந்து வழங்குனராக அர்ப்பணிப்புடன் இருப்பதற்கானதோர் பயணமாகும். X7b மற்றும் X8b உடன் HONOR X9B” இன் அறிமுகம், புதுமை மற்றும் தரத்திற்கான எங்கள் ஆர்வத்தினை பிரதிபலிக்கிறது. இலங்கையின் நுகர்வோர் ஒப்பிடமுடியாத தரம் மற்றும் மதிப்பை அனுபவிக்கும் வகையில் இந்த மாதிரிகள் சந்தைக்கு கொண்டு வரப்படுகின்றன” என்று SINGER குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மகேஷ் விஜேவர்தன, இப்புதிய சாதனங்களின் அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்தார். இந்த ஆண்டின்HONOR இன் அறிமுக நிகழ்வு HONOR X9B மையமாகக் கொண்டதோடு, இது மிகச்சிறந்த ULTRABOUNCE ANTI DROP DISPLAY தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. இந்த அம்சம், வாடிக்கையாளர்களுக்கு அளித்த வாக்குறுதியின் அடையாளமாக, நீடித்துழைப்புடன் புதுமையின் அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டுகிறது.