488
மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் இன்று (28) வெளியிடப்பட உள்ளன.
புதிய கட்டண திருத்தத்தின் பிரகாரம் சுமார் 18 சதவீத மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மின்சார சபையினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள மின் கட்டணத்தை குறைக்கும் புதிய யோசனை குறித்து ஆலோசிப்பதற்காக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கூட்டமும் இன்று நடைபெறவுள்ளது.
இதேவேளை, மின் கட்டணத்தை 37 வீதத்தால் குறைக்க வாய்ப்பு உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.