Sunday, September 8, 2024
Home » கல்முனை மாநகர சபையின் பதில் கணக்காளர் ஹபீபுல்லாஹ் கடமையேற்பு

கல்முனை மாநகர சபையின் பதில் கணக்காளர் ஹபீபுல்லாஹ் கடமையேற்பு

by sachintha
February 27, 2024 11:46 am 0 comment

 

கல்முனை மாநகரசபையின் பதில் கணக்காளராக நியமிக்கப்பட்டுள்ள வை. ஹபீபுல்லாஹ் நேற்று திங்கட்கிழமை (26) மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி முன்னிலையில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச். ஜௌஸி உட்பட பிரிவுத் தலைவர்களும் உத்தியோகத்தர்களும் பங்கேற்றிருந்தனர். இதன்போது மாநகர ஆணையாளர் தலைமையில் உத்தியோகத்தர்கள் அனைவரும் பதில் கணக்காளரை வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

கல்முனை வலயக் கல்விப் பணிமனையின் கணக்காளராக கடமையாற்றி வருகின்ற ஹபீபுல்லாஹ் அதற்கு மேலதிகமாக கிழக்கு மாகாண சபை பிரதம செயலாளரினால் கல்முனை மாநகர சபை பதில் கணக்காளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(சாய்ந்தமருது விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x