பொலிஸ் நிலையங்களில் விபரங்களை பதிய யோசனை
நாடளாவிய ரீதியில் சகல பிரஜைகளதும் தகவல்களை சேகரிக்கும் புதிய வேலைத் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.நாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை இலகுவில் அடையாளம் காணும் நோக்கில், இப்புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தனித்தனி நபர்கள் மற்றும் குடும்பங்களின் தகவல்கள், வசிக்கும் இடம், தேசிய அடையாள அட்டை எண், கிராம அலுவலர் பிரிவு போன்ற தகவல்களை உள்ளடக்கிய படிவத்தை பூர்த்தி செய்து, வசிப்பிடத்துக்குரிய பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படவுள்ளனர். வசிப்பிடத்துக்குரிய பொலிஸ் பிரிவை விட்டு வேறொரு பொலிஸ் பிரிவுக்கு இடம்பெயரும் சந்தர்ப்பத்தில், அது தொடர்பாக கிராம சேவை அதிகாரியின் பரிந்துரையுடன் பொலிஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் பொது மக்கள் வலியுறுத்தப்படவுள்ளனர்.