நமக்குத் தெரிந்தபடி, தவக்காலம் என்பது இயேசுவைப் பின்பற்றுபவர்களாக நமது விசுவாச வாழ்வினை வலுப்படுத்தும் நோக்கிலான உள்ளகத் தியானிப்பின் தயாரிப்பின் காலமாகும்.
பொதுவாக தவக்காலத்தில் இறைவேண்டல், உண்ணாநோன்பு, தர்ம செயல்கள் போன்றவற்றில் கவனம் செலுத்தினாலும், இன்றைய நற்செய்தியில் நாம் கவனம் செலுத்துவதற்காக இயேசு மூன்று விடயங்களை முன்னிறுத்துகின்றார்.
மனித ரீதியில் நோக்குகையில் அவை நமக்கு புதிய வாழ்வினைப்பெற உதவதுடன், உயிர்ப்பு என்கிற புதிய வாழ்வினை நோக்கி நம்மை நகர்த்துகின்றது.
லூக்கா நற்செய்தியின் மூன்று வார்த்தைகளில், இயேசு நமக்கு கூறுவது யாதெனில், இரக்கமுள்ளவராய் இருங்கள், தீர்ப்பிடாதீர்கள், மன்னியுங்கள் என்பதாகும்.
நம் வாழ்வின் ஏதொவொரு கட்டத்தில் இந்த மூன்றிலும் இல்லாவிட்டாலும், ஏதாவது ஒன்றில் தவறியிருப்போம் என்று நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள முடியுமென நான் உறுதியாக நம்புகிறேன்.
எனவே இன்றைய நமது இறைவேண்டலானது திருப்பாடல் ஆசிரியர் கூறுவதுபோன்று, “ஆண்டவரே, எங்கள் பாவங்களுக்கேற்ப எங்களோடு நடந்து கொள்ளாதேயும்” என்பதாகும்.
இத்தவக்காலப் பயணத்தின்போது, நாம் தொடர்ந்து இறைவேண்டல் புரியும்போதும், நோன்பு நோற்கும்போதும், தொண்டுப்பணிகளைச் செய்யும்போதும், இரக்கமுள்ளவராய், தீர்;ப்பிடாதவர்களாய், மன்னிப்பவர்களாய் இருக்க நினைவிற் கொள்வோம்.
-அருட்தந்தை நவாஜி (திருகோணமலை மறைமாவட்டம்)