Home » இலங்கையில் 6 பேரில் ஒருவர் அரச ஊழியர்

இலங்கையில் 6 பேரில் ஒருவர் அரச ஊழியர்

- அரசுக்கு பாரிய சுமையானதால் அதிகரித்த வரிகள்

by Prashahini
February 26, 2024 1:06 pm 0 comment

இலங்கையில் ஆறுபேரில் ஒருவர் அரச ஊழியராக இருப்பது அரசுக்கு பாரிய சுமையாக உள்ளது. இதனாலே அதிகரித்த வரிகள் அறவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

கண்டி கிரேட் கெண்டியன் ஹோட்டலில் நேற்று (25) இடம்பெற்ற வைபவம் ஒன்றின் போதோ அவர் இதனைத் தெரிவித்தார்.

கண்டி முஸ்லிம் வர்த்தகர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு 30 வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு இடம்பெற்ற வைபவத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்தாவது,

இலங்கையில் 6 பேருக்கு ஒருவர் அரச ஊழியர்களாக உள்ளனர். எனவே அவர்களது முழுச் சுமையையும் அரசே பொறுப்பேற்க வேண்டியுள்ளது. வரிக்கொள்கைகள் தொடர்பான பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் வரி அறவிடாமல் அரசினால் எதுவும் செய்ய முடியாது. எமது நாட்டில் உள்ள ஆறுபேரில் ஒருவரது சுமையை அரசு தாங்க வேண்டிய நிலையில் வரி அறவிடாது இருந்தால் அது சாத்தியமாகாது.

வரி செலுத்துவோர் வரிசையில் முக்கியமாக வர்த்தகர்களே உள்ளனர். அந்த வகையில் வர்த்தகர்களின் பங்களிப்பு பாராட்டப்பட வேண்டியதாக உள்ளது. கண்டி முஸ்லிம் வர்த்தகர் சங்கம் தனது வர்த்தக நலன்களுக்கு அப்பால் சென்று சமூகநல மேம்பாட்டு வேலைத்திட்டங்களிலும் ஈடுபடுவதைக் காண முடிகிறது என்றார்.

இவ்வைபவத்தில் உரையாற்றிய மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தெரிவித்தாவது,

வர்த்தகம் இல்லாத நகரம் ஒரு பாலடைந்த நகரமாகும். ஒரு நகரம் சிறப்புற்று விளங்க வேண்டுமாயின் அங்கு சிறந்த வர்த்தகம் நடக்க வேண்டும். அந்த வகையில் கண்டி நகர வர்த்தகத்திற்கு முஸ்லிம் வர்த்தகர் சங்கம் பாரிய பங்களிப்புக்களை செய்து வருகிறது என்றார்.

கண்டி மாவட்டப் பாராளுமன்ற அங்கத்தவர்களான றவூப் ஹகீம். எம்.எச்,ஏ. ஹலீம், கண்டி மாவட்ட மேலதிக செயலாளர் லலித் எட்டம்பாவல, கண்டி முன்னாள் மேயர் கேசர சேனாநாயக்கா உட்பட பலர் இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர்.

அக்குறணை குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x