822
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடல் பகுதியில் பெரியளவிலான சுறா மீன் ஒன்று கடற்தொழிலாளரின் வலையில் சிக்கியுள்ளது.
குறித்த சுறா சுமார் 3,700 கிலோ கிராம் எடையுடையது என தெரிவிக்கப்படுகிறது.
வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியை சேர்ந்த கடற்தொழிலாளர் ஒருவரின் வலையில் சிக்கிய பெரியளவிலான சுறா கடுமையான போராட்டத்தின் மத்தியில் , சக கடற்தொழிலாளர்களின் உதவியுடன் கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
யாழ்.விசேட நிருபர்