Home » “உரித்து” காணி உரிமை: பதிவு செய்ய தொலைபேசி இலக்கம் அறிமுகம்

“உரித்து” காணி உரிமை: பதிவு செய்ய தொலைபேசி இலக்கம் அறிமுகம்

- மு.ப. 8.30 - பி.ப. 8.30 வரை: 1908/ 0114 354600/ 0114 354601

by Rizwan Segu Mohideen
February 26, 2024 10:24 am 0 comment

– டிஜிட்டல் விண்ணப்பப் படிவம்: www.tinyurl.com/urumaya

“உரித்து” (உருமய) தேசிய வேலைத் திட்டத்தின் மூலம் மக்கள் தமது காணியின் முழுமையான உரிமையை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கும் நோக்கில் அதற்காக விண்ணப்பிப்பதற்கு அவசரத் தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தினமும் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை 1908 எனும் அவசரத் தொலைபேசி இலக்கம் மற்றும் 0114 354600/ 0114 354601 எனும் தொலைபேசி இலக்கத்துடன் ஜனாதிபதி அலுவலகத்தின், உருமய தேசிய செயற்பாட்டு அலுவலகத்தை தொடர்பு கொண்டு, பொதுமக்கள் தமது கோரிக்கைகளைப் பதிவு செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

காணி உரிமை வழங்கும் உருமய தேசிய செயலகம் திறந்து வைப்பு

www.tinyurl.com/urumaya (டிஜிட்டல் விண்ணப்பப் படிவம்) படிவத்தைப் பூர்த்தி செய்தும் இதற்கான பதிவுகளை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1935 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க நில மேம்பாட்டுக் கட்டளைச் சட்டத்தின் மூலம் விவசாயிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதிப் பத்திரங்கள் / கொடுப்பனவுப் பத்திரங்கள் உள்ள அரசாங்கக் காணிகளை நிபந்தனைகளின்றி முழுமையான உரிமையை மக்களுக்கு வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் 2024 வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட ஒரு தனித்துவமான முன்மொழிவாகும்.

இந்த “உரித்து” நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக முழுமையான உரிமையுடைய காணி உறுதிப்பத்திரங்களைப் பெறுவதன் மூலம், குறித்த காணிக்கு புதிய பெறுமதி கிடைப்பதுடன், அவர்களின் உரிமையைப் பாதுகாத்து அவர்களின் குடும்பத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் வாய்ப்பு உருவாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x