தவறு செய்யும் நபர்களிடமிருந்து பாடசாலை மாணவர்களை காப்பாற்றும் நடவடிக்கையாகவே எமது விசேட யுக்திய சுற்றிவளைப்பு அமைந்துள்ளது. பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து பாடசாலைகள் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்வதே எமது இலக்காகும். எதிர்காலத்தை பொறுப்பேற்கவுள்ள குழந்தைகளின் எதிர்காலத்தை இருளில் ஆழ்த்தும் வேலையையே இவர்கள் செய்வதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். பொரலந்த பொலிஸ் கெடட் பிரிவின் புதிய பயிற்சி நிலையத்தை திறந்துவைக்கும் நிகழ்வு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
மாணவர்களை இலக்கு வைக்கும் போதைவஸ்து வியாபாரிகளை கைது செய்வதே எமது இலக்கு
யுக்திய நடவடிக்கை நோக்கமும் இதுவே
273
previous post