Home » Emerald 4ஆவது காட்சியறையை சாய்ந்தமருதில் திறக்கிறது

Emerald 4ஆவது காட்சியறையை சாய்ந்தமருதில் திறக்கிறது

by mahesh
February 25, 2024 11:32 am 0 comment

இலங்கையின் முன்னணி ஆடவருக்கான ஆடை வர்த்தகநாமமான Emerald, தனது புத்தம் புதிய காட்சியறையை அண்மையில் சாய்ந்தமருதில் திறந்து வைத்துள்ளதன் மூலம், அதிகளவான வாடிக்கையாளர்களை சென்றடைவதற்கான தனது அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தியுள்ளது. இலக்கம் 52, பிரதான வீதியில் அமைந்துள்ள இக்காட்சியறையானது இவ்வரத்தகநாமத்தின் நான்காவது காட்சியறையாகும் என்பதோடு, ஒப்பிட முடியாத பேஷன் அனுபவத்தை நாடு முழுவதும் வழங்குவதற்கான அதன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இது சுட்டிக்காட்டுகிறது.

அதன் புகழ்பெற்ற ஆடவர்களுக்கான ஆடை வகைகளுக்கு அப்பால், சாய்ந்தமருது காட்சியறையானது பெண்களுக்கான ஆடைகள் (Daywear) மற்றும் வசீகரிக்கும் ஆடம்பர சல்வார்களின் (Luxury Shalwars) வரிசையை கொண்டுள்ளது. இந்த அற்புதமான அறிமுகத்தின் மூலம், ஸ்டைலான மற்றும் அதிநவீன பெண்களின் ஆடைகளுக்கான வளர்ந்து வரும் கேள்வியை அது பூர்த்தி செய்கிறது. Emerald வர்த்தகநாமம் முழுக் குடும்பத்திற்கும் ஏற்ற ஒரே இடமாக மாறுவதற்கு இது வாய்ப்பை ஏற்படுத்துகிறது.

இக்காட்சியறையைத் திறந்து வைத்து கருத்துத் தெரிவித்த, Emerald இன்டர்நேஷனல் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.எப்.எம். இக்ராம், ‘Emerald வர்த்தகநாமத்தின் அனுபவத்தை சாய்ந்தமருதுக்குக் கொண்டுவருவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். இந்த விரிவாக்கமானது, அதிகளவான வாடிக்கையாளர்களுக்கு மாறுபட்ட மற்றும் உயர்தர பேஷனை வழங்குவதற்கான எமது உறுதிப்பாட்டை காட்டுகிறது. பெண்களுக்கான Daywear மற்றும் ஆடம்பர ஷல்வார்களின் (Luxury Shalwars) அறிமுகத்தின் மூலம், எமது வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்து, உண்மையான ஷொப்பிங் அனுபவத்தை உருவாக்குகிறோம்.” என்றார்.

புதிய சாய்ந்தமருது காட்சியறையானது, அதில் காணப்படும் பல்வகைப்பட்ட தயாரிப்புகளை பார்வையிட்டு, Emerald இன் வித்தியாசத்தை அனுபவிக்க அனைவரையும் அழைக்கிறது. இலக்கம் 52, பிரதான வீதி, சாய்ந்தமருது எனும் முகவரியில் அமைந்துள்ள இக்காட்சியறைக்கு நீங்களும் சென்று, உங்களுடைய தனித்துவமான பாணியையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் வகையிலான பேஷனை அடையாளம் கண்டுகொள்ளுங்கள்.

Emerald ஆனது, ஒரு இலட்சிய ஆணின் ஆழத்தில் பதிக்கப்பட்ட ஒரு வர்த்தக நாமமாகும். அது தற்போது ஒவ்வொரு ஆணினதும் அலுமாரியிலும் இன்றியமையாத அங்கமாக வளர்ச்சியடைந்துள்ளது. இலங்கையில் பேஷன் போக்குகளை மாற்றியமைப்பதில் தரம், நம்பகத்தன்மை, புத்தாக்கங்களை இந்த வர்த்தக நாமம் எடுத்துக்காட்டுவதுடன், ஸ்டைல் மற்றும் ஆளுமையில் உயர்ந்த இடத்தை பெற வாடிக்கையாளர்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது இலங்கையில் உள்ள ஒரே ISO தரச்சான்றிதழ் பெற்ற ஆடைகளுக்கான வர்த்தகநாமமும் ஆகும். அது தரத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதுடன், மிகவும் வசதியான மற்றும் சமகால வடிவமைப்புகளை மாத்திரம் வழங்குவதற்காக அதன் அனைத்து தயாரிப்புகளிலும் உலகத்தரம் வாய்ந்த தரத்தை பேணி வருகின்றது.

Emerald அதன் ஒப்பிட முடியாத தயாரிப்புகள் மூலம் பேஷன் ஆர்வலர்களை தொடர்ச்சியாக வசீகரித்து வருகிறது. நேர்த்தியான formal சேர்ட்கள் மற்றும் காற்சட்டைகள் முதல் ஸ்டைலான casual மற்றும் நவநாகரீக chino pants உடனான evening ஆடைகள் வரை அனைத்து வகை ஆடைகளையும் அது கொண்டுள்ளது. அத்தோடு, இவ்வர்த்தக நாமமானது ஒவ்வொரு மனிதனின் பேஷன் தேவையையும் பூர்த்தி செய்கிறது. இதன் தயாரிப்புகளில் crew neck t-shirts மற்றும் polo shirts போன்றவையும் அதற்கு ஏற்ற வகையிலான அணிகலன்களும் காணப்படுவதோடு, அது athleisure ஆடைகள் மூலம் வசதியையும் ஸ்டைலையும் தடையின்றி ஒன்றிணைக்கிறது. அது மாத்திரமன்றி, உரிய வசதியை உறுதி செய்யும் வகையிலான உள்ளாடை வகைகளும் இங்கு காணப்படுவதோடு, Emerald ஜூனியர் ஆனது, 4 – 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சொகுசான ஆடைகளை வழங்குகிறது. UTILITECH ஆடைகள் அதிக நீட்சித் திறன் கொண்ட துணியால் செய்யப்பட்ட bottom வகைகளை வழங்குகின்றது. இது, நீட்சித் தன்மை கொண்ட இடுப்புப் பகுதியைக் கொண்டுள்ளதோடு, சிறப்பாக பணியாற்றுவதற்கு ஏற்ற வகையில் உகந்த வடிவத்தையும் வளைவு நெளிவுகளை தடையின்றி மேற்கொள்ளவுமான அம்சத்தை தேடுபவர்களுக்கு உகந்ததாகவும் அமைகிறது. “Authentic Denim”, தயாரிப்புகள் டெனிம் அனுபவத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வதோடு, அது தனது தூய வடிவத்துடன் கலப்படமற்ற ஆடையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. புத்தாக்கம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றின் கலவையை வெளிப்படுத்துகின்ற ஜப்பானிய டெனிம் துணிகள், சொகுசு மற்றும் அசைவுகளுக்கு ஏற்ற வகையிலான உண்மையான டெனிம் பாணியின் அம்சத்தையும் வெளிப்படுத்துகிறது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பெண்களுக்கான Daywear மற்றும் Luxury Shalwar ஆடை வகைகள், UTILITECH ஆடை வகைகள், Authentic Denim ஆடை வகைகள் உள்ளிட்ட, மாறுபட்ட மற்றும் பரந்த தயாரிப்பு வகைகள் மூலம், உண்மையான பல்வகைத் தன்மையை Emerald வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு தலைமுறையைச் சேர்ந்த ஆண், பெண் மற்றும் இளைஞர்களும் தங்கள் தனித்துவமான பாணியையும் நம்பிக்கையையும், ஒப்பிட முடியாத பேஷன் ஆடைகள் மூலம் வெளிப்படுத்த முடியும் என்பதை Emerald உறுதி செய்கிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT