Home » இலங்கை கல்வி சேவை உத்தியோகத்தர் மீது தாக்குதல்

இலங்கை கல்வி சேவை உத்தியோகத்தர் மீது தாக்குதல்

கல்வி திணைக்களத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு

by gayan
February 24, 2024 6:50 am 0 comment

இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு மாகாண பிரதி கல்வி பணிப்பாளரான எஸ்.துஸ்யந்தன் என்பவரை இலங்கை ஆசிரியர் சங்க பிரதிநிதி பீ.உதயரூபன் கடமை நேரத்தில் தாக்கியதாகவும் இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

பிரதி கல்வி பணிப்பாளர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன். தாக்குதல் நடாத்திய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை- தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை 20 ஆம் திகதி மாகாண கல்வித்திணைக்களத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் இடமாற்றங்கள் தொடர்பான மேல்முறையீட்டு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பிரசன்னமாக இருந்த மேல் முறையீட்டு சபையின் பிரதிநிதி இல்லாத இலங்கை ஆசிரியர் சங்க உறுப்பினர் பீ.உதய ரூபன் கூட்டம் ஆரம்பிப்பதற்கு முதல் மாகாண கல்வி பணிப்பாளரை நோக்கி இழிசொல் பிரயோகம் செய்ததுடன், பிரதி கல்வி பணிப்பாளரை தாக்கியதாகவும் இதனை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்து அலுவலக ஊழியர்கள் அமைதியான முறையில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.அத்துடன் இப்போராட்டத்தை தொடர்ந்து இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.யீ.எம்.டபிள்யூ.ஜீ. திஸாநாயக்கவிடம் மகஜர் கடிதத்தையும் கையளித்தனர்.

(ரொட்டவெவ தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT