Monday, May 20, 2024
Home » சுப்பர் சிக்ஸ் கிரிக்கெட் நாளை

சுப்பர் சிக்ஸ் கிரிக்கெட் நாளை

by Gayan Abeykoon
February 23, 2024 3:48 pm 0 comment

கொழும்பு மாவட்ட மகளிர் கிரிக்கெட் சங்கத்தின் 28 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் லங்கா ஐ.ஓ.சி. நிறுவத்தின் அனுசரணையில் ஆடவர் மற்றும் மகளிருக்கான சுப்பர் சிக்ஸ் மென்பந்து கிரிக்கெட் தொடர் நாளை (24) மற்றும் நாளை மறுதினம் (25) வெலிசர நவலோக்க கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளுக்கான போட்டிகள் வெவ்வேறாக நடைபெறவுள்ளன. ஆட்ட நாயகன், தொடர் நாயகன், சிறந்த களத்தடுப்பாளர் போன்ற விருதுகளும் வழங்கப்படவுள்ளன.

இதில் லங்கா ஐ.ஓ.சி. உட்பட முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த 13 அணிகள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திபக் தாஸ் பிரதம அதிதியாக பங்கேற்கவுள்ளார். இவ்வாறான போட்டித் தொடர் ஒன்றுக்கு லங்கா ஐ.ஓ.சி. அனுசரணை வழங்குவது இதுவே முதல் முறையாகும்.

பல தசாப்தங்களாக இலங்கைப் பாடசாலைகளில் அடிமட்ட விளையாட்டுக்களை அபிவிருத்தி செய்வதற்கும் விளையாட்டுகளில் பன்மைத்துவத்தை ஊக்குவிப்பதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவரும் நெஸ்லே மைலோ, ஊட்டச்சத்தின் மூலம் சிறுவர்களை முன்னேற்றும் நோக்குடன் இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு அனுசரணை வழங்க முன்வந்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT