Saturday, May 25, 2024
Home » வட மாகாணத்தில் ‘மாபெரும்’ மைலோ கால்பந்து சம்பியன்சிப்

வட மாகாணத்தில் ‘மாபெரும்’ மைலோ கால்பந்து சம்பியன்சிப்

by Gayan Abeykoon
February 23, 2024 11:47 am 0 comment

நெஸ்லே லங்கா நிறுவனத்தின் மைலோ வர்த்தக நாமத்தின் அனுசரணையில் இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான கால்பந்தாட்ட தொடரின் முதல் சுற்று போட்டிகள் 05 மாவட்டங்களில் நடைபெறவுள்ளன.

மன்னார் மாவட்டத்தில் நாளை (24) நடைபெறும் போட்டிகளுடன் ஆரம்பமாகும் இந்தத் தொடர், தொடர்ந்து முல்லைத்தீவு (மார்ச் 02), வவுனியா (மார்ச் 09), கிளிநொச்சி (மார்ச் 16) மற்றும் யாழ். (மார்ச் 22) மாவட்டங்களில் நடைபெறவுள்ளன. இதில் ஐந்து மாவட்டங்களில் இருந்தும் சுமார் 250 அணிகள் பங்கேற்கவுள்ளன. மாவட்ட மட்ட வெற்றியாளர்களாக 02 வயதுப் பிரிவுகளில் இருந்தும் 16 ஆடவர்–  மகளிர் அணிகள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளன. இதன் இறுதிச் சுற்றுப் போட்டிகள் மார்ச் 23 ஆம் திகதி யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் நடைபெறும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT