Home » முதலீட்டு ஊக்குவிப்பு வலய ஊழியர்களின் மனநல மேம்பாட்டுக்கு விஷேட திட்டம்

முதலீட்டு ஊக்குவிப்பு வலய ஊழியர்களின் மனநல மேம்பாட்டுக்கு விஷேட திட்டம்

சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் அறிமுகம்

by Gayan Abeykoon
February 23, 2024 10:22 am 0 comment

இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக அளப்பரிய பங்களிப்பை நல்கிவரும் முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் பணியாற்றும் ஊழியர்களின் மனநல மேம்பாட்டினை நோக்காகக் கொண்ட விஷேட வேலைத்திட்டமொன்று சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இவ்வேலைத்திட்டம் பியகம சுதந்திர வர்த்தக வலயத்தின் பிரதான அலுவலகக் கேட்போர் கூடத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ள போதிலும் நாட்டிலுள்ள அனைத்து முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களுக்கும் இவ்வேலைத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.

சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம், சர்வதேச நிதி அமைப்பு என்பன ‘பெடர் வேர்க் லங்கா’ கருத்திட்டமென இவ்வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தி முன்னெடுக்கப்பட உள்ளது.

ஆடைத்தொழிற்சாலைகளில் மாத்திரமல்லாமல் இந்நாட்டிலுள்ள ஏனைய அனைத்து தொழிற்சாலைகளிலும் பணியாற்றும் ஊழியர்களின் மனநல மேம்பாட்டை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படவிருக்கும் இத்திட்டத்தின் ஊடாக மனநல மேம்பாட்டுக்கான வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்தல், அது தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான கட்டமைப்புக்களை உருவாக்குதல் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் இலங்கை மாலைதீவு பிராந்திய பணிப்பாளர் ஜோனி சிம்பசன் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வேலைத்திட்டத்தின் ஊடாக சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களின் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகள் என்பவற்றினால் அவர்கள் தனிமை அடைவதை தவிர்த்து நம்பிக்கைக்குரியவருடனான தொடர்பாடல்களுடன்  தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கான வழிகாட்டல்கள் வழங்கப்பட உள்ளன.

இவ்வைபவத்தில் இலங்கை முதலீட்டு சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.கே.டி லோரன்ஸ், பெட்டர் வேர்க் கருத்திட்டத்தின் தலைவர் கேசவமுரளி கணபதி, விஷேட மருத்துவ நிபுணர் டொக்டர் ஹரிச்சந்திர யகந்தாவல உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மர்லின் மரிக்கார்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT