Wednesday, November 13, 2024
Home » பெப்ரவரியில் கவர்ச்சிகரமான பல்வேறு சலுகைகளை வழங்கும் வோக் ஜுவல்லர்ஸ்

பெப்ரவரியில் கவர்ச்சிகரமான பல்வேறு சலுகைகளை வழங்கும் வோக் ஜுவல்லர்ஸ்

by Rizwan Segu Mohideen
February 23, 2024 3:13 pm 0 comment

அன்பையும், காதலையும் வெளிப்படுத்தும் அடையாளத்தின் மாதம் மலர்ந்துள்ள நிலையில், இந்த காதலர் தினத்தில் ஆடம்பரம் மற்றும் காலத்தால் அழியாத அழகின் நேர்த்தியுடன் உங்களது பேராவலைத் திருப்திப்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், தனித்துவமான ஊக்குவிப்பு சலுகைகள் மற்றும் புதிய தெரிவுகளை அறிமுகப்படுத்துவதை வோக் ஜுவல்லர்ஸ் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. மிகவும் பிரபலமான OG (பழைய தங்கத்திற்கு பதிலாக புதிய தங்கம்) என்ற ஊக்குவிப்பு சலுகையையும் வோக் ஜுவல்லர்ஸ் பெப்ரவரி மாதத்தில் மீண்டும் முன்னெடுக்கின்றது.    

அந்த வகையில், 2024 பெப்ரவரி 7 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரையில் வைர நகைகள் மற்றும் விலைமதிப்பற்ற கற்களின் ஜொலிக்கும் கொண்டாட்டத்தை வோக் ஜுவல்லர்ஸ் வழங்குகின்றது. காலத்தால் அழியாத இரத்தினக்கற்களைக் கொண்ட நேர்த்தியான ஆபரணங்களுக்கு 45% என்ற கவர்ச்சியான தள்ளுபடியை அனுபவியுங்கள். உங்களுடன் என்றென்றும் நிலைத்திருக்கும் பொலிவையும், நுட்பத்தையும் இவை ஒவ்வொன்றும் கொண்டுள்ளன. உங்கள் அன்பிற்குரியவருக்கு பாசத்தின் அடையாளமாகவோ, உங்களுக்காகவோ அல்லது எதிர்கால நலனைக் கருதிய முதலீடாகவோ என எதுவாக இருப்பினும் இந்த மட்டுப்படுத்தப்பட்ட சலுகையானது தவற விடக்கூடாத ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.     

OG (பழைய தங்கத்திற்கு பதிலாக புதிய தங்கம்) என்ற தனது பிரபலமான ஊக்குவிப்புச் சலுகையை மீண்டும் ஒரு தடவை 2024 பெப்ரவரி 08 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை வோக் ஜுவல்லர்ஸ் வழங்குகின்றது. இது மிகவும் விசேட விலையுடன், நீங்கள் உங்களுடைய பழைய தங்கத்திற்கு பதிலாக புதிய ஆபரணங்களை அல்லது தங்கப்பாளங்களைப் பெற்றுக்கொள்ள இடமளிப்பதுடன், ஒப்பற்ற பெறுமதி மற்றும் முதலீட்டுக்கான வாய்ப்பினை வழங்குகின்றது. உங்களுடைய பழைய தங்க ஆபரணங்கள் அல்லது தங்கப்பாளங்களுக்கு பதிலாக புதிய மற்றும் தனித்துவமான, நேர்த்தியான ஆபரணங்களை வோக் ஜுவல்லர்ஸின் கைதேர்ந்த நகைக்கலைஞர்களின் அற்புதமான  கைவண்ணத்துடன் பெற்றுக்கொள்ளலாம்.      

இப்பிரத்தியேகமான சலுகைகள் குறித்து கலந்துரையாடிய வோக் ஜுவல்லர்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. அனுர ஹேமச்சந்திர அவர்கள், “காலத்தால் அழியாத வகையில், தலைமுறை தலைமுறையாக உள்ளங்களில் வீற்றிருக்கும் மறக்க முடியாத அனுபவங்களைத் தோற்றுவிப்பதில் வோக் ஜுவல்லர்ஸ் உறுதியான நம்பிக்கையுடன் இயங்கி வருகின்றது. பெப்ரவரி மாதத்தில் நாம் வழங்குகின்ற பிரத்தியேகமான சலுகைகள், பெறுமதிமிக்க எமது வாடிக்கையாளர்களுக்கு தலைசிறந்த பெறுமதி மற்றும் தரமான கைவண்ணம் ஆகியவற்றை வழங்குவதில் எமது உண்மையான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றது. இந்த பெப்ரவரியில் அன்பையும், காதலையும் வெளிப்படுத்தும் காலத்தை நாம் கொண்டாடுகின்ற நிலையில், உங்களுடைய நினைவுகள் என்றென்றும் உங்களுடன் நீடிப்பதை உறுதிப்படுத்தும் ஆபரணங்களுடன், வாழ்வில் மிகவும் அழகிய தருணங்களை மகிழ்வுடன் கொண்டாட முன்வருமாறு அனைவரையும் நாம் அன்புடன் அழைக்கின்றோம்,” என்று குறிப்பிட்டார்.

இந்த வியப்பூட்டும் சலுகைகளுடன் இணைந்ததாக, Charme D’elicat என்ற தனது காதலர் தின பிரத்தியேக தெரிவையும் வோக் ஜுவல்லர்ஸ் வழங்குகின்றது. நிரந்தரமான அன்பினால் ஈர்க்கப்பட்டு, மனதை மயக்கவைக்கும் தெரிவின் ஒவ்வொரு ஆபரணமும் மகிழ்ச்சியான தருணங்கள் மற்றும் இதயபூர்வமான உறவுகளின் சாரத்தை வசப்படுத்துகின்றன. எளிமையான வடிவமைப்பு மற்றும் நேர்த்தியுடன், அன்பின் தூய்மையையும், எளிமையையும் Charme D’elicat கொண்டாடுவதுடன், இத்தெரிவுகளை பாசம் மற்றும் கௌரவத்தின் நேர்த்தியான வெளிப்பாடாக மாற்றுகின்றது.       

திரு. ஹேமச்சந்திர அவர்கள் மேலும் கூறுகையில், “உங்களுடைய விசேட தருணங்கள் மற்றும் கொண்டாட்டங்களில் அங்கம் வகிப்பது எமக்கு ஒரு பெரும் பாக்கியம் என்பதுடன், அவை என்றென்றும் உங்களுடன் நிலைத்திருப்பதை உறுதி செய்ய நாம் உதவுகின்றோம். எமது பெப்ரவரி ஊக்குவிப்பு சலுகைகள் மற்றும் Charme D’elicat தெரிவுகளுடன், நீங்கள் அன்பினைக் கொண்டாட உதவி, எமது நேர்த்தியான ஆபணரங்களைப் போல் காலத்தால் அழியாத நினைவுகளுடன் அவை பிரகாசிப்பதை தோற்றுவிக்க நாம் முயற்சி செய்கின்றோம்,” என்று குறிப்பிட்டார்.  

இந்த பெப்ரவரி மாதத்தில் காதல் மற்றும் ஆடம்பரத்தின் மாயாஜாலத்தை வோக் ஜுவல்லர்ஸில் அனுபவியுங்கள். உங்களுடைய காதலை நேர்த்தியாக வெளிப்படுத்தும் தெரிவைக் கண்டறிய உங்களுக்கு அருகாமையிலுள்ள வோக் ஜுவல்லர்ஸ் காட்சியறைக்கு வருகை தாருங்கள் அல்லது இணையத்தின் மூலமாக வோக் ஜுவல்லர்ஸின் ஒட்டுமொத்த தெரிவுகளையும் ஆராயுங்கள்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT