Saturday, May 25, 2024
Home » பெறுமதி மிக்க பரிசுகளோடு விநியோக சேவையாளர்களை கௌரவித்த Uber Eats

பெறுமதி மிக்க பரிசுகளோடு விநியோக சேவையாளர்களை கௌரவித்த Uber Eats

by Rizwan Segu Mohideen
February 21, 2024 11:07 am 0 comment

இலங்கையின் மிகவும் அபிமானம்பெற்ற உணவு மற்றும் மளிகைப் பொருட்களை விநியோகிக்கும் தளமான Uber Eats, இன்று ‘Delivery Bonanza’ ஊக்குவிப்பின் நான்காவது பதிப்பில் விநியோக சேவையாளர்களின் பங்களிப்பை தனது தளத்தில் கொண்டாடியுள்ளது. நம்பகமான மற்றும் தங்குதடையற்ற விநியோகங்கள் மூலம் உண்பவர்களுக்கு சிறந்த தள அனுபவத்தை வழங்கிய மிகவும் ஈடுபாடுகளைப் பேணிய 300 விநியோக சேவையாளர்களை நிறுவனம் அங்கீகரித்து, கௌரவித்துள்ளது. குறைந்தபட்ச ரத்துசெய்தல், தரம் அல்லது பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களுடன் அதிகபட்ச விநியோகங்களின் அடிப்படையில் விநியோக சேவையாளர்கள் அங்கீகரிக்கப்பட்டனர்.

Delivery Bonanza 4.0 இன் ஒரு பகுதியாக, கொழும்பு, கண்டி, குருநாகல், நீர்கொழும்பு, களுத்துறை, காலி, பேருவளை மற்றும் பண்டாரகம ஆகிய பிரதேசங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட விநியோக சேவையாளர்கள் Uber Eats தளத்திற்கு வழங்கியுள்ள தொடர்ச்சியான பங்களிப்பிற்காக ரூபா 8 மில்லியன் மதிப்புள்ள பரிசுகளுடன் அங்கீகரிக்கப்பட்டனர். பல்வேறு பாரிய வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் பல்பொருள் அங்காடி பரிசு வவுச்சர்கள் மற்றும் மழைக்கவச அங்கிகள் வரை பல்வேறு பரிசுகள் அடங்கியிருந்தன. மிகவும் கூடுதலான அளவில் ஈடுபாடுகளைப் பேணிய பதினொரு விநியோக சேவையாளர்களுக்கு வழங்கப்பட்ட மாபெரும் பரிசுகளில் மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் சைக்கிள், மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டர்கள் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் சைக்கிள்கள் ஆகியவை அடங்கும்.

இந்நிகழ்வில் உரையாற்றிய Uber Eats ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பொது முகாமையாளர் வருண் விஜேவர்தன அவர்கள், “Delivery Bonanza 4.0 எங்கள் தளத்தில் உள்ள விநியோக சேவையாளர்களின் ஓயாத முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை அங்கீகரிக்கும் மற்றொரு ஆண்டைக் குறித்து நிற்கிறது. அவர்கள் எமது பரந்த விநியோக வலையமைப்பிற்கு உந்து சக்தியாக உள்ளனர். அவர்கள் உணவு மற்றும் மளிகைப்பொருள் விநியோகத்திற்கு மீள்வரைவிலக்கணம் வகுக்க எமக்கு இடமளித்துள்ளனர். Uber Eats இனை இலங்கையில் அனைத்து இல்லங்களிலும் அபிமானம் பெற்ற ஒரு நாமமாக மாற்றுவதற்கு வழிவகுத்துள்ளனர். எமது விநியோக சேவையாளர்களை ஆதரிப்பதற்கும் அவர்கள் தமது வாழ்வின் இலக்குகளை அடைய அவர்களுக்கு உதவுவதற்கும் எங்கள் பயணத்தில் அவர்கள் ஆற்றிய முக்கிய வகிபாகத்திற்கு உரிய மதிப்பிடுவதற்கும் நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.

Uber Eats Delivery Bonanza என்பது, Uber Eats செயலியிலிருந்து (app) அதிகபட்ச மதிப்பைப் பெற விநியோக சேவையாளர்களுக்கு வலுவூட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. Uber இயங்குதளம் அவர்களின் வாழ்க்கைக்கு ஏற்ற நெகிழ்வான தொழிலைக் கண்டறிய உதவுகிறது மற்றும் அவர்களின் நிதியியல் இலக்குகளை அடைய உதவுகிறது. கடந்த ஆண்டு, Bonanza விசேட பதிப்பின் நிகழ்வின் ஒரு பகுதியாக, Uber Eats ஆனது 100 விநியோக சேவையாளர்களுக்கு மின்சாரத்தால் இயங்கும் சைக்கிள்களை வழங்கியமை, அதன் தளத்தில் விநியோக சேவையாளர்களை ஆதரிப்பதற்கும், ஊக்கமளிப்பதற்கும் அந்நிறுவனம் கொண்டுள்ள உறுதிப்பாட்டை மேலும் எடுத்துக்காட்டுகிறது.

Uber Eats பற்றி
மிக இலகுவாக ஒரு பொத்தான அழுத்துவதன் மூலமாக உள்நாட்டு உணவகங்கள் மற்றும் மளிகைக் கடைகளில் தேவையானவற்றை ஆர்டர் செய்து, மக்கள் தமது உணவு, மளிகைப் பொருட்கள் மற்றும் பலவற்றை நம்பகத்தன்மையுடனும் விரைவாகவும் தருவித்துக் கொள்ள Uber Eats அவர்களுக்கு இடமளிக்கின்றது. 2018 இல் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, Uber Eats ஆனது Uber இன் உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் போக்குவரத்து, விநியோக நிபுணத்துவத்தை பல நகரங்களுக்கு விஸ்தரித்து சேவைகளை வழங்கி வருகிறது. மேலும், மளிகைப் பொருட்களை ஒரே நாளில் விநியோகித்தல் மற்றும் நிலைபேண்தகு விநியோகங்களை அறிமுகப்படுத்துதல் போன்ற புதிய அறிமுகங்களுடன் இயங்குதள அனுபவத்தை மேம்படுத்துகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT