மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு வந்தமையின் 200 ஆண்டுகளின் நிறைவினை ஒட்டி, இலக்கியம், திரைப்படம், நடன ஆற்றுகை என்பவற்றினை உள்ளடக்கிய ஒரு நாள் நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (25) யாழ்ப்பாணப் பொதுநூலகத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெறவுள்ளது.
மலையகத் தமிழ் மக்களின் வாழ்வியல், அனுபவங்கள், இலட்சியங்கள், போராட்டங்கள் என்பவற்றினைப் பற்றிப் பேசும் இலக்கியங்கள் மற்றும் ஏனைய கலை வடிவங்கள் மீது கவனத்தினைக் குவிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிகழ்விலே இலக்கியம், திரைப்படம், நடனம் போன்ற துறைகளிலே ஆர்வம் கொண்டோர், பொதுமக்கள் அனைவரினையும் இந்நிகழ்விலே கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் – பிரபாகரன் டிலக்சன்