யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட முதலாம் வருட மாணவனான மானிப்பாய் பகுதியை சேர்ந்த 22 வயதான ரமேஷ் சகீந்தன் எனும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் யாழில் உள்ள பிரபல உதைப்பந்தாட்ட கழகங்களில் ஒன்றான ஊரெழு றோயல் கழகத்தின் பிரபல வீரருமாவார்.
நீர்வேலி சந்தைக்கு ,மானிப்பாயில் உள்ள தனது வீட்டில் இருந்து இன்று (21) காலை மோட்டார் சைக்கிளில் பயணித்த போது. நீர்வேலியை அண்மித்த பகுதியில் ,வீதியின் குறுக்கே ஓடிய நாய் ஒன்றுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவரை மீட்டு , யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழ்.விசேட நிருபர்